திருவள்ளூர், ஆக. 09 –

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் இணைதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம். தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது இம்மாவட்டத்தில் அதற்கான பணி முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இணையதள இணைப்பு வழங்கும் பணியானது, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்கிட மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இக்கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதப்பணி தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கிறது.

இத்திட்டத்திற்கான ரேக், யுபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்கள், அம்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு  கிராம ஊராட்சிகளிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசுக் கட்டடத்தில் நிறுவுவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வுபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் தூய்மையாக பராமரிக்க அரசால் வலியுறுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும் பாப் பொறுத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட் பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின் படி பொறுப்பாக்கப் பட்டுள்ளார்.

அதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளைப் பெற முடியும்.

மேலும் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பாப் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யுபிஎஸ், ரோட்டர், ராக் மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் முழுக்க முழுக்க அரசு உடைமாயாகும் எனவும் மேலும் அவ்வுபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here