மறைமலைநகர், ஏப். 02 –
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழ்க்கரணை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ்ராஜ் ( 40 ) மேலும் அவருக்கு திருமணமாகி மனைவி புனிதமலர் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் சந்தோஷ்ராஜ் பில்டிங் காண்ட்ராக்டராகவும் அவரது மனைவி புனிதமலர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சந்தோஷ்ராஜ் பணி சம்பந்தமாக வெளியூர் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி புனிதமலரும் வீட்டைப் பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தை பயன்டுத்திய மர்மநமர்கள் பூட்டியிருந்த வீட்டின் கேட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்குள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் இத்தகவலை புனிதமலர் க்கு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த புனிதமலர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்து இருந்த 42 பவுன் தங்க நகைகள் அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 7200 ரூபாய் ரொக்கப்பணம் முதலானவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது அப்போது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து புனிதமல் வெளியூர் சென்றிருந்த தனது கணவருக்கு இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக வந்த சந்தோஷ்ராஜ் மறைமலைநகர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, தடயங்களை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் இதுப்போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து இப்பகுதியில் நடந்து வருவதாகவும், அதிலும் குறிப்பாக திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அறங்கேறி வருகிறது எனவும், இந்நிலையில் போலீசார் அறவே இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.






















