திருவண்ணாமலை பிப். 17 –

பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலம் அமைந்த திருவண்ணாமலை நினைக்க முக்தி தரும் ஆன்மீக திருநகராகும். அண்ணாமலையார் கோவில் பவுர்ணமி கிரிவலம் தீபதிருவிழா ஆகியவற்றதால் உலக அளவில் இந்நகரம் புகழ்பெற்று இருக்கிறது. ஞானிகளும் சித்தர்களும் அவரித்த புன்னிய பூமி இது. அதோடு திராவிட இயக்க அரசியல் வரலாற்றிலும் திருவண்ணாமலைக்கு எப்போதும் தனித்துவமான இடமுண்டு. ஆன்மீகமும் அரசியலும் தழைத்தோங்கும் திருவண்ணாமலை நகரின் நகராட்சி தேர்தல் எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது.

   திருவண்ணாமலை நகரம் 1989ஆம் ஆண்டு மாவட்டத்தின் தலைநகர் எனும் சிறப்பை பெற்றது. இந்நகராட்சி கடந்த 1896ம் ஆண்டு உருவானது. நூற்றாண்டு கடந்துள்ள திருவண்ணாமலை நகராட்சிக்கு இப்போது 126 வயது மொத்தம் 13.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமந்திருக்கிறது. மிகப்பெரிய நகராட்சி. 1959ம் ஆண்டு 2ம்நிலை நகராட்சியாக 1974ம் ஆண்டு முதல்நிலை நகராட்சியாக 1998ம் ஆண்டு தேர்வுநிலை நகராட்சியாக 2008ஆம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாக படிப்படியாக தரம் உயர்ந்தது.

   திருவண்ணாமலை நகராட்சியில் ஆண்கள் 68,117 பெண்கள் 74,331 திருநங்கைகள் 12 உள்பட மொத்தம் 1,42,460 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு நகராட்சி தேர்தலில் இந்த நகராட்சியின் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,05,715 ஆக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 36,745 அதிகரித்திருக்கிறது. குறிப்பாக இளம் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உருவாக்கியிருக்கிறார்கள்.

   இந்த நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. அதில் 20 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை நகராட்சி வரலாற்றில் முதன்முறையாக நகராட்சி தலைவராக பெண் ஒருவர் பதவியேற்கவுள்ளார். திருவண்ணாமலை நகராட்சியில் 1974லிருந்து 2016 வரை நகரமன்ற தலைவராக காங்கிரஸ் 7 முறையும் திமுக 4 முறையும் அதிமுக 1 முறையும் பதவி வகித்துள்ளது.

  கடந்த 2011ம் ஆண்டு நடந்த நகராட்சி தேர்தலில் நேரடியாக நகராட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் வார்டு கவுன்சிலர்கள் மூலம் நகராட்சி தலைவர் தேர்ந்தெடுக்கவுள்ளனர். நகராட்சி தேர்தல் கவன்சிலர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது இந்த தேர்தலில் மொத்தமுள்ள 39 வார்டுகளிலும் 271 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

   திமுக நேரடியாக 35 வார்டுகளிலும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 வேட்பாளர்களும் போட்டியிடுகிறது. கூட்டணியின்றி அதிமுக 39 வார்டுகளிலும் பாஜக 24 வார்டுகளிலும் பாமக 11 வார்டுகளிலும் தேமுதிக 1 வார்டிலும் போட்டிடுகிறது. தேர்தல் களத்தில் பெரும்பாலான வார்டுகளில் திமுக முன்னிலையில் உள்ளன. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வார்டு வார்டாக நேரில சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

   கடந்த 8 மாத காலத்தில் தேர்தல் வாக்குறுதியில் 75 சதவிதம் நிறைவேற்றப்பட்டதாகவும் நகரமன்ற தேர்தல் முடிந்தவுடன் என்னென்ன திட்டங்கள் நகராட்சியில் கொண்டுவரப்படும் என்பது குறித்தும் வாக்காளர்களிடையே தெருமுனை பிரச்சாரம் மூலம் உதயசூரியன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் சின்னங்களுக்கும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

  நகராட்சியில் உள்ள வார்டுகளையெல்லாம் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றும் நிர்வாகிகள் யாருமின்றி பெரும்பான்மை வார்டுகளில் அதிமுகவினர் மிரண்டு உள்ளனர். உட்கட்சி பூசல் வெளிப்படையாகவே வெடித்திருக்கிறது ஆனாலும் ஒவ்வொரு வார்டிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏவும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் ஆகியோரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

   மேலும் இந்த நகராட்சியில் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது சின்னங்களுக்கு வாக்காளர்களிடையே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். பெரும்பாலும் திருவண்ணாமலை நகராட்சியில் அதிகளவில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்று கிரிவல நகரின் முதல் பெண் நகராட்சி தலைவராக திமுகவே வருவதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே வாக்காளர்களின் உள்ளங்களை வென்று வெற்றிவாகை சூடுப்போகிறவர் யார் என்பதும் வருகிற 22ந் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here