காஞ்சிபுரம், டிச. 31 –
காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ராமதாஸ் செயலாக்க சரக வன அலுவலராக பணியாற்றி வருகின்றார்.
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மரகடைகள் இயங்கி வருகின்றது. இந்த கடைகளை நடத்த ஆயிரகணக்கில் லஞ்சம் வாங்குவதுமாகவும், ஒவ்வொரு கடைகளிலும் மாதம் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை பணம் கேட்டு மிரட்டுவதாக தொடர்து புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள மரகடையில் லஞ்சம் வாங்குவதும், மாதம் லஞ்சம் பணத்தை வன அதிகாரி ராமதாஸ் லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைய தளத்தில் வைரலாகி வருகின்றது.
வருமானம் இல்லாமல் கடை நடத்தி வரும் சிறு மரக் கடைகளிலும் வனத்துறை அதிகாரி ராமதாஸ், காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் கடைக்கு நேரில் சென்று கட்டாயபடுத்தி பணத்தை வசூலித்து வருவதாக மரக்கடை உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.
மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு நடத்தி லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கவும், உடனே அவரை பணியிட நீக்கம் செய்ய வேண்டும். என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட தீயனைப்புதுறை அதிகாரி குமார் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்டுத்தியதும் குறிப்பிடதக்கது.






















