திருவள்ளூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், விடையூர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமையில் விடையூர் கிராமத்தில் உள்ள சித்தேரி மற்றும் பெரிய ஏரியில் இதுவரை தூர் வாரி ஆழம் படுத்தாமல் இருப்பதால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மூன்று போகம் நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகும், மேலும் மழைக் காலங்களில் பொழியும் நீரானது தேங்கி நிற்க இடம் இல்லாமல் வீணாக போவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் ஏரியை தூர்வாரி ஆழம் படுத்தினாள் விவசாயிகள் நீரை விவசாய சாகுபடி செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் மேலும் அப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளுக்கும் போதுமான நீர் ஆதாரம் ஏற்படும் வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஏரியை தூர்வாரி ஆழம் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடையூர், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவினைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அதுக்குறித்து மேற்கொள்ளப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கையை எடுப்பதாக அப்போது உறுதியளித்துள்ளார்.