கும்பகோணம், ஏப். 21 –
கும்பகோணம் மாநகரப் பகுதியில் உள்ள சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், தனி வட்டாட்சியர்கள் பிரேமாவதி, திருவிடைமருதூர் ரவி, மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாநில செயற்குழு உறுப்பினர் பழ. அன்புமணி தெரிவிக்கும் போது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சலுகைகளை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் ஒரு கால் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம், மற்றும் மடக்கு சேர், மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும், மேலும், அரசு நிதியில் கட்டப்படும் வணிக வளாகங்களில் 5 சதவீதமும், அரசுப் பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை வரும் ஆண்டுக்குள் நிரப்ப வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வித் தொகையை 2 மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், மேலும், அனைத்து பொதுத் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் கட்டாய இடம் பெறுவதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும், எனவும், மேலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்குக் கால வரன் முறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும் என்றவாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மேலும், தொடர்ந்து, நிலுவையிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவது குறித்து, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதனிடம் அப்போது அவர் வலியுறுத்தினர். மேலும் அப்போது நாளை தஞ்சை வாருங்கள் என்று அவருக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் தொடர்ந்து அவர் மாற்றுத்திறனாளிகளை வரவழைத்து அலைக்கழிக்காதீர்கள் எனவும், மேலும் தஞ்சை மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பணிபுரியும் உமா என்பவர் மாற்றுத்திறனாளிகளை படுகேவலமாக நடத்துகிறார். எனவும் அப்போது, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதனிடம் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அக்கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
மேலும், தொடர்ந்து மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன் மாற்றுத்திறனாளிகள் வரமுடியாது என்றால் உதவித்தொகை வழங்க முடியாது எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அலுவலர் மற்றும் உமாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்ததும், அப்போது குறுக்கிட்ட கோட்டாட்சியர் பூர்ணிமா சமாதானம் செய்து வைத்தார். மேலும், தஞ்சாவூரிலுள்ள அலுவலர் மிகவும் தரக்குறைவாக பேசுவதையும், அலைக்கழிப்பதையும் தவிர்க்க வேண்டும் உமா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் அப்போது வலியுறுத்தினர்.
























