திருவாரூர், ஆக. 07 –
இன்று நாடு முழுவதும் மறைந்த தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பில் கலைஞர் கோட்டத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டவுதவிகளை வழங்கி கலைஞரின் புகழுக்கு வலு சேர்த்தனர்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருவாரூர் அருகே புலிவலம் கடைவீதியில் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவர் தேவா தலைமையில் கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை மரக்கன்றுகள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன .இதனை தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற அலுவலகம் மற்றும் திமுக நகர அலுவலகம் முன்புள்ள கலைஞர் திருவுருவ படத்திற்கு நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதனைத்தொடர்ந்து, நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அதுபோல் காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அங்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து, கலைஞர் கோட்டம் முன்பு இளைஞர் அணி சார்பில் மாநில துணை அமைப்பாளர் இளையராஜா தலைமையில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருஉருவப்படத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் தொடர்ந்து ஏழு எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
























