தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
இந்த தேர்தல் என்பது ஜனநாயகத்தை காக்கும் தேர்தல், பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்தித்து கேட்பேன், என்ன தைரியம் இருந்தால் திராவிட இயக்கத்தை அளித்தேத் தீர்வோம் என்று கூறுவீர்கள் என்று, அது பிரதமரின் ஆணவத்தை காண்பிக்கின்றது என்றார்.
இந்த தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல், விவசாய பெருமக்களின் வாழ்வை தீர்மானிக்கும் தேர்தல், வணிக பெருமக்களின் வாழ்வை ஜி எஸ் டி திருத்தம் கொண்டு வருவதன் மூலம் மாற்றி அமைக்கப்போகின்ற தேர்தல் இந்துத்துவ வாதிகள் தீர்மானித்து விட்டார்கள், தலைநகரை வாரணாசி என்று,
இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்று பகிரங்கமாக தெரிவித்து விட்டார்கள், எனவே விழிப்புணர்வுடன் மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்து உதயசூரியனை வெற்றி பெற வைக்க வேண்டும் என வை.கோ.கேட்டுக் கொண்டார்.





















