பழவேற்காடு, பிப். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் இறங்கி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர். மேலும் அப்போது அவர்கள் GO BACK MODI என குழல் முழக்கம் எழுப்பினார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாள் போராட்டம் அறிவித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் உள்ள ஏரியில், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை.சந்திரசேகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அவர்கள் இறங்கி கருப்பு கொடிகளை கையிலேந்திக் கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை அப்போது அவர்கள் எழுப்பினர்.

கடந்த 10 ஆண்டுகளாக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருவதாக மேலும் அவர்கள் குற்றம் சாட்டினர். நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடிக்கும் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி GO BACK MODI என முழக்கமிட்டனர்.

கடல் தாமரை என்ற அமைப்பை உருவாக்கி மீனவர்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த பாஜக அதனை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here