காஞ்சிபுரம், பிப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் சக்தி பீட தலங்களில் ஒன்றானதும் உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 15- ஆம் தேதி தேதி காலை அத்திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் காலை மாலை என இரு வேளைகளிலும் அருள்மிகு காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

இந்நிலையில் விழாவின் 7 ஆம் நாளான இன்று காலை அருள்மிகு காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதி உடன் பச்சை நிற பட்டு உடுத்தி மனோரஞ்சிதம்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு யாகசாலை அருகே எழுந்தருளினார்.

பின்னர் யாகசாலை பூஜை நிறைவு பெற்ற பின்பு திருக்கோவில் அருகே நின்று இருந்த திருத்தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருத்தேரை ஆள் மேல் தோளில் தாங்கியபடி நான்கு ராஜ வீதி வழியாக அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் வலம் வர, எண்ணிலடங்கா பக்தர்கள் அம்மனை மனமுருக வழிப்பட்டு உளம் மகிழ்ந்தனர்.

பின்னர் ஆதிசங்கரர் முன் செல்ல மேள தாளங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டியினர் வேதங்கள் பாடிவர காஞ்சீபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆங்காங்கே காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here