ஆரணி, மார்ச். 14 –
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆரணி பேரூராட்சிப் பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடங்கியது ஆரணி பேருராட்சி இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுமார்.140 ஆண்டு காலமாக குடியமர்ந்து வருகின்றனர் இருப்பினும் இது நாள் வரைக்கும் இப்பேரூராட்சி பகுதியில் பேரூந்து அமைக்கப்படவில்லை, இதனால் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று. தொழில் பார்பதற்கும் .பள்ளி. கல்லூரிகளுக்கு சென்று வர போதுமான பேருந்துகள் வந்து செல்வதற்கு பேருந்து நிலையம் (பஸ் டெப்போ) இல்லாமல் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து பல்வேறுகட்சியினரிடம் முறையிட்டும். எந்தவித பயனும் கிட்டாத நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜா .சோழவரம் ஒன்றிய தலைவர் ஆர்.சி.பாலாஜி. உள்ளிட்டோர்களின் தலைமையில் பேருந்து நிலையம் இப்பகுதியில் நிறுவ வலியுறுத்தி பேருராட்சியின் செயல் அலுவலர் கலாதரன். பேருராட்சியின் துனைதலைவர் (காங்கிரஸ்) வழக்கறிஞர் சுகுமார். உள்ளிட்டேரிடம். கோரிக்கை மனுவை அளித்தனர்.
முன்னதாக பாஜகாவினர் பேரணியாக நகரம் முழுவதிலும் சென்று பேருந்து நிலையம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பி மனுவை அளித்தனர். அதனை பெற்றுக்கொண்டவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் மூன்று மாதங்களுக்குள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மாபெரும் போராட்டம் மேற்கொள்ளப்படும் என பாஜகவினர் தெரிவித்தனர்.