தேனி மாவட்டத்தில் கிராமசபை மற்றும் வாக்குசாவடி முகவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருகின்ற பிப்-16ம் தேதி தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இப் பகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
கிராமசபை கூட்டம் நடத்தும் இடங்களான வட புதுப் பட்டி சூர்யா நகர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. அப் பணிகள் குறித்த நிலையை ஆய்வு செய்ய இன்று தி.மு.க மாவட்ட பொருப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன்.தலைமையிலான குழு வருகை தந்து ஆய்வு நடத்தினர் அதில் மாவட்ட தி.மு.க இலக்கிய அணி அமைப்பாளர் பாலமுருகன். பெரியகுளம் ஒன்றிய தி.மு.க. பொருப்பாளர் பாண்டியன். தி.மு.க நகரப் பொருப்பாளர் முரளி. தி.மு.க ஆதிதிராவிடர் நலக் குழு மாவட்ட அமைப்பாளர் பிச்சை .நகர இலக்கிய அணி துணை அமைப்பார்.மு. சேதுராமன் பெரியகுளம் முன்னாள் தி.மு.க நகர செயலாளர் ரவி .நகர துணைச் செயலாளர் அப்பாஸ் கான் மற்றும் நாகலிங்கம் ஆகியோர் உடன் வந்து பார்வை இட்டு பணிக் குறித்து நிலையறிந்து சென்றனர் .