பொன்னேரி, ஏப். 26 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார்பு நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த 25 ஆம் தேதியன்று அந்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழ்மொழியை சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடு அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தி அவர்கள் கோரிக்கை முழக்கம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.



















