திருவள்ளூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூர் அருகே மறைந்த ராணுவ வீரரின் மனைவி 75 வயது மூதாட்டியின் சொத்துக்களை அபகரித்த அதிமுக பிரமுகர் இடமிருந்து தன்னுடைய நிலத்தை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியைச் சார்ந்தவர் உஷாராணி 75 வயது, மேலும் அவரது கணவர் மோகன் ராணுவத்தில் பணியாற்றி காலில் குண்டடிப்பட்டு பின்னர் ஆவடியில் உள்ள டேங்க் பேக்டரில் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மேலும் அவர் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவர்களுக்கு சொந்தமாக திருவள்ளூர் அடுத்த கோடுவெளி ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கிலி குப்பம் கிராமத்தில் 50 சென்ட் நிலம் உள்ளது.
அந்நிலத்தை அப்பகுதியில் உள்ள அதிமுக பிரமுகரான நாகராஜ் என்பவர் கோடுவெளி கிராமத்தில் உள்ள உறவினரான வி.ஏ.ஓ. மூலம் அவரது ஆன்லைன் பாஸ்வேர்டு மூலமாக ஆவணங்களை மாற்றி துணை வட்டாட்சியர் உதவியுடன் பெயர் மாற்றி பட்டா வழங்கியுள்ளனர்.
அதனை கேள்விப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவி நிலத்தை தன்னுடைய பெயரில் மாற்றிக் கொண்ட நாகராஜிடம் கேட்ட போது நிலத்தை உங்களுக்கு கொடுக்க முடியாது உங்களால் என்ன பண்ண முடியும் என மிரட்டி உள்ளனர். அதுக் குறித்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உஷாராணி அளித்த போது வட்டாட்சியர் வாசுதேவன் இரு தரப்பினரையும் அழைத்து பேசுவதாக கூறி காலம் தாழ்த்தி வந்த நிலையில் திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ.(RDO) அற்புத்திடம் ராணுவ வீரரின் மனைவி உஷாராணி மற்றும் வழக்கறிஞருடன் வந்து புகார் மனு அளித்துள்ளார்.
அப்போது அவரிடம் தனது நிலத்தை மீட்டு தரும்படி கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தார். மனு பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் விரைவாக மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
பேட்டி. குணசேகரன் வழக்கறிஞர்