தஞ்சாவூர், மே. 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார். ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில்  தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிகளின் 235 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவன், ஏ.டி.எஸ்.பி . முத்தமிழ்செல்வன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அமலா அடங்கிய குழுவினர் வாகனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்தனர்.

அதில் வாகன இருக்கைகள், படிக்கட்டுகள், அவசர வழி கதவு ஆகியவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேப்போல் பள்ளி வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், அவசர தேவைக்கான முதலூதவி மருந்துகள் போன்றவை உள்ளதா என்பது குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

மேலும் அப்போது பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதேபோல் பட்டுக்கோட்டையில் 260 வாகனங்கள் கும்பகோணத்தில் 220 வாகனங்கள் என மாவட்ட முழுவதும் மொத்தம் 715 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here