தஞ்சாவூர், மே. 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

இத்தாலியில் செப்படம்பர் மாதம் நடைபெறவுள்ள இன் லயன் ஹாக்கி இன்டர்நேஷனல் போட்டியில் விளையாட தமிழகத்தில் இருந்து தேர்வாகிவுள்ள தஞ்சையை சேர்ந்த செல்வசுந்தரம் என்ற மாணவரை அவரது வீட்டருகே உள்ள அக்கம் பக்கத்து வீட்டுக்கார ர்கள் மற்றும் அப்பகு மக்கள் என திரளானவர்கள் மாலை, சால்வை அணிவித்தும் இனிப்புகள் ஊட்டியும் தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்தினையும் தெரிவித்து வருகின்றனர்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த தனது மகன் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக இத்தாலி செல்ல தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என மாணவனின் தாய் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தஞ்சை அண்ணா நகரில் தாததா மணி பிள்ளை, பாட்டி லெட்சுமி பராமரிப்பில் வளர்ந்து வரும் மாணவர் செல்வசுந்தரம் .12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ளார்.

மேலும் அவர் 5 ஆம் வகுப்பில் இருந்தே ஸ்கேட்டிங் பயிற்சியை தொடஙகிய மாணவன் செல்வசுந்தரத்தின் தனி திறமையை கண்ட பயிற்சியாளர் இன்லயன் ஹாக்கி விளையாட பயிற்சி அளித்துள்ளார்.

பயிற்சியாளரின் கூற்றை மெய்பிக்கும் வகையில் செல்வசுந்தரம் இன் லயன் ஹாக்கியில் பள்ளி அளவில் வெற்றி பெற்று படிப்படியாக மாவட்டம்,  மாநிலம்,  தேசிய அளவில் வெற்றிகளை குவித்து பதத்தங்கள் வென்றுள்ளார்.

இந்நிலையில், சண்டிகரில் இன்டர்நேஷனல் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடைப்பெற்றது. அதில் பல மாநிலங்கள், பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துக் கொண்டனர்.

அவர்களில் தமிழகத்தில் இருந்து சென்ற தஞ்சையை சேர்ந்த செல்வசுந்தரம் மட்டும் ஜூனியர் பிரிவில் இத்தாலியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் போட்டியில் விளையாட தேர்வாகி உள்ளார்.

மேலும் இரண்டொரு நாளில் மீண்டும் பயிற்சிக்காக சண்டிகர் செல்ல அவர் இருக்கிறார். இன்டர்நேஷனல் போட்டியில் விளையாட தேர்வாகி உள்ள மாணவர் செல்வசுந்தரத்தை அக்கம் பக்கத்தினர் பாராட்டி மாலை, சால்வை அணிவித்து இனிப்பு ஊட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த தனது மகனுக்கு தமிழக அரசு இத்தாலியில நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான செலவினை ஏற்று உதவிட வேண்டும் என செல்வ சுந்தரத்தின் தாயார் ராஜகுமாரி அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here