தங்கானூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன்…
தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டியும், அதில் பங்கு பெறும் சண்டை சேவல் இனமும் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில், அவ்வின சேவல்களையும், பாரம்பரிய போட்டியினை பாதுகாக்கும் விதமாகவும், அப்போட்டியினை தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தி கொண்டு வரும் திருவள்ளூர் மாவட்டம் தங்கானூர் கிராம மக்கள் இவ்வாண்டும் வெகுச்சிறப்பாக அச்சேவல் சண்டை போட்டியினை நீதிமன்ற அனுமதியையும் பெற்று அதற்கான தீவிர பணிகள் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் இவ்வாண்டும் அச்சேவல் சண்டைக்காக தங்கனூர் கிராமத்தில் தைப்பூசத்தினை முன்னிட்டு வருகின்ற 27, 28 ஆகிய இரண்டு தினங்கள் காலை 9 மணியளவில் தொடங்கும் அப்போட்டி மாலை 6 மணி வரை நடைப்பெறுகிறது.
அதற்கான பல்வேறு கட்டுப்பாடுகளோடும், விதிமுறைகள் கடைப்பிடிக்க அறிவுறுத்தியும் விழாக்கமிட்டிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதில் சேவல்கள் காலில் கத்திகள் கட்டுவதும் மதுபானம் ஊற்றுவதும் சாதி மாதம் பெயரை வைத்து அழைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீதி மன்றம் விதித்துள்ளது.
மேலும் போட்டியில் பங்கேற்கும் சேவல்களுக்கு, கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தும் போலீசார் பாதுகாப்பு அளித்தும் கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுரைத்துள்ளதை தொடர்ந்து. போட்டியில் களம் காண உள்ள சேவல்களுக்கு கடந்த 20 நாட்களாக காலை மாலை என தங்கானூர் பகுதியில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு போட்டிக்கு தயார் படுத்தப்பட்டு வருகிறது.
நடைப்பெறவுள்ள அப்போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா கேரளா புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சண்டை சேவல்கள் பங்கேற்க உள்ளதால் 1000 சேவல்கள் ஒரே நேரத்தில் களம் காணும் வகையில் இடம் தயர்நிலை செய்யப்பட்டுள்ளது.
போட்டியில் வெற்றி பெறும் சேவல்களுக்கு தங்க மெடல் மற்றும் சான்றிதழ் முதல் மூன்று இடத்தினைப் பிடிக்கும் சேவல்களுக்கு கேஸ் ஸ்டவ் அடுப்புகள் பரிசுகள் அளிக்க விழா கமிட்டி முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்..