திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா நீர் மோர் பந்தலை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து அவர்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி, ரஸ்னா, ரோஸ் மில்க், ஆரஞ்சு ஆகியவற்றை வழங்கினார்.
அதில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர், அவைத்தலைவர் சிற்றம் சீனிவாசன், நிர்வாகிகள் கோடீஸ்வரன், விஜயகாந்த், நரேஷ், உமாபதி உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.























