கும்பகோணம், ஜூன். 24 –
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு மனு அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வலையப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முல்லைவளவன் கடந்த 20 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தை கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்து தற்போது சட்டமன்ற தொகுதி செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் இவரது சகோதரி படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர் மீது கிழக்கு காவல்துறையினர் 110 வழக்கு போடப்போவதாக கூறப்படுகிறது.
இவர் மீது எந்த புகார்களும் எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்குப் போடும் கிழக்கு காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி திராவிடர் கழகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீலப்புலிகள் இயக்கம் மக்கள் இயக்கம் மற்றும் பல்வேறு கட்சிகள் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையில் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவ்வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து கோட்டாட்சியர் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் உறவழகன் ஒன்றிய செயலாளர் சசிகுமார் சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் சந்திரசேகர் தமிழ்வளவன் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை கருத்தியல் பரப்பு மாநில செயலாளர் அரசாங்கம் விவசாய அணி மாநில செயலாளர் நாகப்பன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் புரட்சியாளன் திராவிட கழக மாவட்டத் தலைவர் நிம்மதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் செந்தில்குமார் தீண்டாமை ஒழிப்பு பொறுப்பாளர் பழஅன்புமணி நீலப்புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன் மக்கள் இயக்கம் பொறுப்பாளர் குறிச்சிமலை பாலா மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது போடும் பொய் வழக்குப் போடும் காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.






















