சென்னை, ஜன. 27 –

தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல்களை 4 மாதத்தில் நடத்தி முடித்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்கு ஒன்றில் கடந்த செப் 27 – 2021 நீதிமன்றம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆணைப் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை பல்வேறுக் காலகட்டங்களில் எடுத்து வந்தது. அதற்கான இறுதிக் கட்டமாக நேற்று தமிழகத்தில் உள்ள ( 649 ) அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரண தேர்தல் நடத்துவதற்கான தேதி அடங்கிய பட்டியலை வெளியிட்டது.

   அதன் தொடர்ச்சியாக நாளை தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மனு தாக்கலுடன் தொடங்குகிறது. இதில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டவாறு ஒரேக் கட்டமாகத் தேர்தலை நடத்திட  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து வித தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டுள்ளது.

   மேலும், வார்டு மறுவரையறை செய்யப்பட்ட அறிவிக்கையினை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வாக்குச்சாவடி பட்டியல்கள் கடந்த நவ 9 – 2021  மற்றும் ஜன 4 – 2022 அன்றும், அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல்கள் கடந்த ஆண்டு டிச 9 – 2021 மற்றும் நடப்பு ஆண்டு ஜன 10 -2022 அன்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.

   தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிக்கையினை நாளை ஜன 28 – 2022 அன்று வெளியிடுகிறது.  அன்றே வேட்பு மனு தாக்கல் நாளை வெள்ளிக்கிழமை துவங்குகிறது. வேட்பு மனுக்கள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை வழங்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குப்பதிவு பிப் 19 – 2022 சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைப்பெறுகிறது. அதில் கடைசி நேரமான மாலை 5 மணி முதல் 6 மணிவரை கோவிட் -19 அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் அனுமதிக்கப் படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை பிப் 22 – 2022 செவ்வாய்கிழமை அன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் கோவிட் – 19 பெருந்தொற்று தொடர்பான நிலையான இயக்கு செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாடசித் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடுதல் மற்றும் வேட்பு மனுக்கள் பெறுதல் நாளை ஜன 28 வெள்ளிக்கிழமையன்று நாளை தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதிநாள் பிப் 4 வெள்ளிக்கிழமையாகும்.

வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தல் பிப் 5 சனிக்கிழமையில் நடைப்பெறுகிறது.

வேட்பாளர்கள் வேட்பு மனுக்க்களை திரும்ப பெறுதலுக்கான கடைசி தேதி பிப் 7 திங்கள் கிழமையாகும்.

வாக்குப்பதிவு நடைப்பெறும் நாள் பிப்பரவரி 19 – 2022 சனிக்கிழமையாகும்

வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் நாள் பிப் 22 – 2022 செவ்வாய்கிழமையில் நடைப்பெறுகிறது.

தேர்தல் நடவடிக்கைகள் பிப் 24 -2022 வியாழக்கிழமையில் முடிவடைகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு மார்ச் 2 – 2022 புதன் கிழமையில் நடைப்பெறுகிறது.

மார்ச் 4 – 2022 வெள்ளிக்கிழமையன்று நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர், மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோரைத் மறைமுகம் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான  கூட்ட நாளாகும்.

நடைப்பெறயிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்தல், வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல் வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகளை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் மாவட்ட தேர்தல் அலுவலர்கள்களுக்கு உரிய ஆணைகளை வழங்கிவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here