இராமநாதபுரம், ஜுலை,18-  ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை ராமநாதபுரம், மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்களின் ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர்களுக்கான கருத்தரங்கம் ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன் கிழமை நடைபெற்றது. மாவட்ட கன்வீனர் மற்றும் இணைச் செயலாளர் எம். ரமேஷ் வரவேற்று பேசினார். ஜூனியர் ரெட் கிராஸ் தலைவரும் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலருமான்  பி.அய்யண்ணன்  தலைமை வகித்தார்.

 

ஜூனியர் ரெட் கிராஸ் சேர்மன் மண்டபம் கல்வி மாவட்ட   மாவட்ட  கல்வி அலுவலர்  பாலதண்டாயுதபாணி ,ஜூனியர் ரெட் கிராஸ் சேர்மன் ராமநாதபுரம் கல்வி மாவட்ட மாவட்ட கல்வி அலுவலர் ஜி. முத்துசாமி மற்றும் வழுதூர் ஒ.என்.ஜி.ஸி  மேலாளர் எம். இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ஜூனியர் ரெட் கிராஸ் துணைத்தலைவர் எஸ். ஜெயக்குமார் ,துணை சேர்மன்கள் ஏ. சண்முக ராஜேஸ்வரன், டி.எம்.எஸ். கோபி, முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி முதல்வர் எஸ். நந்தகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கில் 2019 – 2020 ம்  ஆண்டுக்கான செயல்திட்டங்களாக நீரின்றி அமையாது உலகு, சாலை பாதுகாப்பு, ஊடக மாசு, மரங்கள் நமது வரங்கள் என வகைப்படுத்தப்பட்டது.

 

மேலும் இரத்த தானம் செய்ய வேண்டிய அவசியம் பற்றி ஆசிரியர் சோ.அய்யப்பன் பேசினார். நீரின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் பசுமை பாரத இயக்கம் தீனதயாளன் பேசினார். கருத்தரங்கில் இணைக் கன்வீனர்கள்  எம்.பாலமுருகன்,    எம்.ஜீவா, நடுநிலைப்பள்ளி பொருளாளர் பரமேஸ்வரன், இணைக் கன்வீனர்கள் எஸ்.சத்குருகுமார், எம்.குணசேகரன், இராமேஸ்வரம் வட்டார கன்வீனர் தினகரன் உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கருத்தரங்கில்    ஜுன்-2019 முதல் பிப்ரவரி –2020 வரையிலான செயல்திட்டங்கள் குறித்த அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.    ஜுனியர் ரெட் கிராஸ் பொருளாளர் எஸ்.குழந்தைசாமி நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here