புதுடெல்லி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டு, ஆலை மூடப்பட்டது.

இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை அமல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மற்றும் அரசின் மேல்முறையீடு மனு ஆகியவற்றை சேர்த்து சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நீதிபதிகள் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது. ஆலையை திறப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகவேண்டும் என்றும் கூறினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படலாம் என்பதால் தூத்துக்குடியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நெல்லை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, மதுரை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here