கும்பகோணம், செப். 05 –
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதியில் திருட்டுப் போன இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்தில் கடந்த மாதம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருவையாறு வட்டம், வீரசிங்கம்பேட்டை, மாதா கோவில் தெருவைச் சேர்ந்த மரியதாஸ் மகன் அகஸ்டின் (52) மற்றும் அம்மன் பேட்டை வடக்கு தெருவைச்சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சுகுமார்(34) ஆகிய 2 பேரையும் காவல்துறை உதவி ஆய்வாளர் மோகன்ராஜன் மற்றும் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 10 இருசக்கர வாகனமும்,திருச்சியில் 1 சொகுசு காரையும் அவர்கள் திருடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.