கும்பகோணம், ஜன. 5 –
தமிழர்களின் பாரம்பரிய விழாவான, பொங்கல் பண்டிகை, கும்பகோணம் தனியார் பள்ளியில், சாதி மதங்களை கடந்து, சமத்துவ பொங்கலாக முற்றிலும் கிராமிய சூழ்நிலையில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது, இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்கள்.
உலகம் தழுவிய அளவில் ஒட்டு மொத்த தமிழர்களின் பாரம்பரிய விழாவாக, வேளாண்மையை போற்றும் வகையிலும், வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், சூரியனை வணங்கும் நிகழ்வாகவும், தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது, சாதி மதங்களை கடந்து, தமிழன் என்ற உணர்வோடு கொண்டாடப்படும் இவ்விழாவினை போற்றும் வகையில், இன்று கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் தாளாளர் கார்த்திகேயன் தலைமையில், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா மற்றும் முதல்வர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலையில், முற்றிலும் கிராமிய சூழலில், பள்ளி மாணவ மாணவியர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான, பரதநாட்டியம், தேவராட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் அரங்கேற, மறுபுறம், பத்திற்கும் மேற்பட்ட புத்தம் புது பானைகளில் பச்சரிசி இட்டு, பொங்கல் வைத்து பொங்கல் விழா, உற்சாகமாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பொங்கல் விழாவினை ரசித்து மகிழ்ந்தனர்.
பேட்டி : மாணவியர்கள் 1. வசிமா நஸ்ரீன் 2. ஸ்ரீவர்ஸினி