மதுரை, நவ. 9 –

தமிழகம் முழுவதிலும் இலங்கை தமிழர்கள் 110 முதல் 115 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 70 முதல் 75 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மதுரை ஆனைமலை எஸ்.எல்.ஆர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் 1991 முதல் பல்வேறு காலக்கட்டத்தில் ஆதரவற்ற நிலையில் வந்தவர்கள் இப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

ஆனைமலை 2015 வரை இது ஆனைமலை நகராட்சியாக 18 வார்டுகளை உள்ளடக்கி உள்ளாட்சி நிர்வாகமாக செயல்பட்டு வந்தது. தற்போது மதுரை ( வடக்கு ) மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு, மாநகராட்சின் 1வது மண்டலத்தில் 3 வார்டு பகுதியாக இருக்கிறது. எனக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் உள்ள எஸ்.எல்.ஆர். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர இல்லாத நிலை உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இருப்பினும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நவம்பர் 2 ஆம் தேதி அன்று வேலூர் மாவட்டம் மேல் மொணவூரில் நடைப்பெற்ற அரசு விழா ஒன்றில் இலங்கை தமிழர்களுக்கு புதியதாக 3510 குடியிருப்புக்களுக்கும், ரூ. 30 கோடி மதிப்பீட்டில் குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை போன்ற அடிப்படை வசதி போன்ற திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் முகாம் வாழ் தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இருப்பினும் இம் மறுவாழ் முகாமில் அடிப்படை வசதியில் ஒன்றான சாலை வசதி இல்லாமல் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேறும் சகதியாக இப்பகுதி முவதும் நிறைந்து இருக்கிறது. நடப்பதற்கோ, இரு சக்கர வாகனத்தில் செல்லவோ குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் குடிநீர் எடுத்து வர மிகவும் சிரமப் படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தண்ணீர் குடத்துடன் சகதியில் வழுக்கி விழும் ஆபத்தான நிகழ்வுகளும் நடந்தேறுகிறது.

எனவே, மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் இதன் குறித்து கவனம் கொண்டு இவர்களது கடினமான வாழ்க்கை முறையை சீர்படுத்தி எளிதாக வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சாலை வசதியை அமைத்துத் தரும்படி அவர்கள் பகுதியை சார்ந்து வாழும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிர்வாகம் இப்பிரச்சினையை தீர்க்குமா என எதிர் பார்ப்போடு காத்திருக்கிறார்கள். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம். தம்பட்டம் நாளேட்டிற்காக செய்தியாளர் சுந்தர் மதுரை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here