திருவாரூர், ஜூன். 22 –

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள அரசவனங்காடு நடுத்தெருவில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 வருடங்கள் பழமையான நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியினால் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறுகின்றனர்.

இந்நிலையில் இந்த நீர் தேக்க தொட்டி  மிகவும் பழுதடைந்து அபாயகரமான நிலையில் தற்போது உள்ளது.  மேலும் இந்த நீர் தேக்க தொட்டியை நம்பிதான் 500 குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நீர்த் தொட்டி இடிந்து விழுந்தால் சுற்றி வீடுகள் கோவில்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் சிறுவர்கள்  விளையாடுகிறார்கள். அதே போல மேலே ஏறி சுத்தம் செய்ய உதவும் ஏணி படியும் சேதமடைந்துள்ளதால் மேலே ஏறி சுத்தம் செய்யமுடியாமல்  துர்நாற்றம் வீசுவதாகவும் ஆகவே மிகவும் சேதமடைந்து  அச்சப்படும் வகையில் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் பயந்து பயந்து செல்கின்றனர். அதனால் உடனடியாக புதிய நீர் தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.

 

பேட்டி: 1.செல்வமணி 2.சாரங்கபாணி

3.முருகையன் (அரசவனங்காடு கிராமவாசிகள்)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here