பொன்னேரி, ஜூன். 09 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சோம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ எல்லையம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று காலை நடைபெற்றது.
அதனை முன்னிட்டு, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை நடைபெற்று புதிய சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் நடைப்பெற்றது..
தொடர்ந்து, நான்கு கால பூஜை நடைபெற்று ஸ்ரீ எல்லையம்மன் ஆலய கோபுர கலசங்களுக்கும் நுழைவாயில் மண்டப கலசங்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.. பின்னர் பல்வேறு நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றி பட்டாச்சாரியார்கள் பல்வேறு மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவை காண கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளித்தும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஒட்டுமொத்த சோம்பட்டு கிராமத்தினர் செய்திருந்தனர்.
இக் கும்பாபிஷேக விழாவிற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து விழாவினை சிறப்பித்தனர்