மதுரவாயல், ஏப். 1 –
பெருநகர சென்னை மாநகராட்சியின் அமமுக கட்சியின் 148 வது வார்டு கவுன்சிலருக்கு மாலை அணிவித்து வீரவாள் கொடுத்து அம முக கட்சியினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணி மற்றும் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் லக்கி முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மண்டலப் பொறுப்பாளர் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் கரிகாலன், மண்டலப் பொறுப்பாளர், கழக தலைமை நிலைய செயலாளர் உமாதேவன் ex M.L.A, ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடந்து முடிந்த நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு கட்சியின் வளர்ச்சிகள் பற்றி ஆராயப்பட்டு, மேலும் அதுக்குறித்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இடையே ஆலோசனைகள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது. மேலும், முக்கிய பதவிகளுகளுக்கான புதிய பொருப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
விழாவில் அமமுக கட்சி சார்பில் பெரு நகர சென்னை மாநகராட்சி தேர்தலில் 148ஆவது வார்டுக்கு அமமுக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட V.V.கிரிதரன் என்பவருக்கு கழக நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து வீரவாள் பரிசளித்து கட்சியினர் அவரை வாழ்த்தினார்கள். 200 வார்டுகளை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு, இவர் ஒருவர் மட்டுமே அமமுக கட்சி கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பெருவாரியான கட்சி முக்கிய பொருப்பாளர்கள், நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






















