கும்பகோணம், அக். 21 –
கும்பகோணத்தில் சிவசேனா கட்சி சார்பில் நாகேஸ்வரர் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் குட்டி சிவக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, நகர் தலைவர் பிரபு, நகர் பொது செயலாளர் அருளானந்தம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் சிவசேனா சார்பில் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சென்னையில் இருந்து கும்பகோணம் வழியாக செல்லும் ரத யாத்திரையை ஆன்மீக நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்க வேண்டும்.
அனைத்து நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் மகாமகக்குளத்தில் குளத்தில் புனித நீராட, அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நகர அமைப்பாளர் ரமேஷ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, தினகரன், நகர துணைச் செயலாளர்கள் தவசி, அருண்குமார், ரமேஷ், முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.