இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் 7 நாள் கண்காட்சி துவக்க விழா ஆவடியில் உள்ள அஜய் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமூடன் பங்கேற்றனர்.
ஆவடி, டிச. 13 –
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் விதத்தில் “ஆஜாதி கா அம்ருத் “ மஹோத்சவ் என்ற இராணுவ தளவாட கண்காட்சி நிகழ்ச்சி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இந்நிகழ்வை காணொளி மூலம் புது டெல்லியிலிருந்து துவக்கி வைத்தார்.
இதனை சென்னையை அடுத்த ஆவடி ராணுவ கனரக வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் சார்பில் அஜய் விளையாட்டு மைதானத்தில் நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கனரக வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் பொது மேலாளர் சஞ்சய் கிஷோர் ரிப்பன் வெட்டி பொது மக்களுக்கு திறந்து வைத்தார். இதில் ஆவடி ராணுவ கனரக வாகனங்கள் மற்றும் இராணுவ தளவாட உற்பத்தி பொருட்கள் காட்சி படுத்த பட்டிருந்தது. மேலும் இந்தக் கண்காட்சி பொதுமக்களுக்கு 13-12-2021 தொடங்கி வருகிற 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதைப் பார்க்க பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ உயர் அதிகாரிகள், மற்றும் பெருந்திரளான பொது மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.