மதுரவாயல், ஆக. 06-
பல கோடி சுங்க கட்டணமாக வசூலித்தும் சாலையில் மின் விளக்கு வசதி கூட செய்து தராத மத்திய நெடுஞ்சாலை துறை மீது குற்றம் சாட்டியும் அதனைக் கண்டித்தும் கையில் தீ பந்தம் ஏந்தி, டார்ச் லைட் அடித்து கொண்டு மணல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் டோல்கேட்டை முற்றுகையிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரவாயல் – தாம்பரம் செல்லக்கூடிய பைபாஸ் சாலையில் கடந்த பத்து வருடமாக மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தால் நாள்தோறும் விபத்துகள் மற்றும் வழிப்பறிகள் நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சுங்க கட்டணமாக பல கோடி ரூபாய் வசூல் செய்து வரும் நிலையில், சாலையின் இருபுறமும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை அதனைக் கண்டித்தும், உடனடியாக செய்து தர வலியுறுத்தியும் மத்திய நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் யுவராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கையில் தீ பந்தம் ஏந்தியும், டார்ச் லைட் அடித்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
பேட்டி : மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் (யுவராஜ்)