கும்பகோணம், செப். 05 –
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 243 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 20 லட்சம் கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அரசு தலைமை கொறடா கோவி. செழியன் பயனாளிகளுக்கு கடன் தொகையை வழங்கினார்.
பந்தநல்லூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக பயிா்கடன், கால்நடை வளர்ப்புக் கடன், மாற்று திறனாளிகள் கடன், ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கை விடப்பட்டோா் கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ , மகளிா் சுயஉதவிக் குழு கடன், நகைக்கடன் என 243 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 20 லட்சம் கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அரசு தலைமை கொறடா கோவி செழியன் பயனாளிகளுக்கு கடன் தொகையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் கோ.க. அண்ணாதுரை முன்னாள் அவைத் தலைவர் கலியமூர்த்தி மாநில பொதுக்குழு உறுப்பினர் மிசா மனோகரன் ஒன்றிய துணைச் செயலாளர்கள் சாமிநாதன் பீமாராவ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலகுரு மாவட்ட பிரதிநிதி ஜெயபாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்ம பாரி ரமேஷ் குமார் நளினி சண்முகவேல் பந்தநல்லூர் தொடக்க கூட்டு கடன் சங்க செயலர் அருண் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.