திருவாரூர், செப். 21 –
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருவாதிரைமங்கலம் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே அதற்கான பணி ஆணை ஒப்பந்த தாருக்கு வழங்கப் பட்டும், ஆமை வேகத்தில் நகரும் பணியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் சாலை மற்றும் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் விழுந்தெழும் அவலங்களை அப்பகுதி மக்கள் அனுபவித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பலத்தரப்பட்ட மக்கள் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவல நிலை தொடர்வதால் உடனடியாக இப்பணியை ஒப்பந்ததாரர் முடித்திட ஊரக உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அவருக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், மீண்டும் ஒப்பந்ததாரர் அரசு நிர்ணயித்த காலத்திற்குள் பணியினை விரைந்து முடிக்க தாமதிக்கும் நிலையில் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்திடவும், அரசு உத்திரவிட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்நிலை தொடரும் எனில் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக உள்ளதாகவும் அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இச் சாலை வழியாக செல்லும், ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அவசர சிகிச்சை மற்றும் பிரசவ காலங்களில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையும், அருகே உள்ள மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாமலும் கிட்டத்தட்ட ஆறு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவல நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வரும் காலம் கனமழை பெய்யும் காலமாகவும் உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகும் அச்சம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பேட்டிகள்:
1.ஜோதிபாசு
2.கார்த்திகேயன்
3.ராமதாசு 4.காத்தையன் 5.விஜய்