திருவள்ளூர், மார்ச். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மற்றும் ஆரணி பேரூராட்சி  குடியிருப்பு பகுதியில், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் மதுபான கடை இயங்கி வருவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் மேலும் மதுபான பிரியர்கள் மது குடித்து விட்டு குடியிருப்பு பகுதிகளில் தினசரி விழுந்து கிடப்பதாகவும், அதனால் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக வெளியில் செல்ல முடியாத அவல நிலை ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்கமாறு அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் ஆனாலும் துறைச்சார்ந்த நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என மேலும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனால் பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறாக செயல்பட்டு வரும் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும்  அதுக் குறித்து அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கும் போது, மதுபானக்கடை அகற்றாவிட்டால் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here