காஞ்சிபுரம், மே. 29 –
காஞ்சிபுரம் மாட்டம் உத்திரமேரூர் அருகே காட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் மூப்பு வயதுடையவர் கண்ணன் இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை அருகே தனது மகளுடன் சேர்ந்து இளநீர் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது மகன் கார்த்திகேயன் (28) கடந்த 26 ஆம் தேதி மது அருந்த தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். இதன் விளைவாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தந்தை தனக்கு மது அருந்த பணம் தராததால் ஆத்திரம் கொண்ட கார்த்திகேயன் தனது தந்தை கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார் காயமடைந்த கண்ணன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் கட்ட சிகிச்சைக்கு பின் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிகிச்சைகாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை கண்ணன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
மது அருந்த மகனுக்கு தந்தை பணம் தராததால் தந்தையை கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை கொலை செய்து தலைமறைவாக உள்ள கார்த்திகேயனை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.






















