கும்பகோணம், ஜூலை. 03 –

கும்பகோணம் அருகே  உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலாற்றில் அடையாளம் தெரியாத பிறந்து சில தினமே ஆன உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு அச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலற்றில் இன்று காலை அக்கிராமத்தைச் சேர்ந்த  இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையில் பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் மிதப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதனை மீட்டு கரையோரத்தில் எடுத்து பார்த்த போது ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்காத அந்த குழந்தையை யாரோ ஆற்றில் வீசி சென்றது தெரியவந்தது.

இச் சம்பவம் குறித்து தகவலயறிந்த நாச்சியார் கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண் குழந்தையை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிறந்த ஆண் குழந்தை சடலமாக ஆற்றில் கிடந்தது அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here