இராசிபுரம், மே. 23 –

ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை, சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாரத்தில் முத்துக்காளிப்பட்டி, சந்திரசேகரபுரம் மற்றும் குருக்கபுரம் கிராம ஊராட்சிகளில் காணொளி வாயிலாக இவ்விழா நடந்தது.

முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்தில் நடந்த விழாவிற்கு, முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அருள் தலைமை வகித்தார். ராசிபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார் விழா சிறப்புரையாற்றினார்.

உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சுந்தரராசி, மோனிகா, துணைத் தோட்டக்கலை அலுவலர் குணசேகரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விழாவில், ராசிபுரம் தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு விதைகள், மண்புழு உரம், மருந்து தெளிக்கும் பம்ப் மற்றும் விவசாய பொருட்கள் என 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here