சோழவரம், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றியம், தச்சூர் போரக்ஸில், ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நலிவுற்றோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக 50 அடி உயரக் கொடி கம்பத்தில் திமுக கட்சியின் கொடி ஏற்றப்பட்டு அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, போரக்ஸ் பகுதியில் உள்ள நலிவுற்றோர்க்கு தையல் இயந்திரங்கள், புடவைகள், சலவை இயந்திரங்கள் மற்றும் இரவு அறுசுவை உணவென அம்மக்களுக்கு வழங்கி மிகப் பிரமாண்டமாக முதலமைச்சரின் 71 வது பிறந்த நாள் விழாவினை சோழவரம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் போரக்ஸ் பகுதி திமுகவினர் வெகுச்சிறப்பாக அவ்விழாவினைக் கொண்டாடினார்கள். மேலும் அவ்விழா நிகழ்ச்சியால் இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.






















