திருவாரூர், ஜன.01 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்

உலகம் முழுதும் 2024 ஆங்கில புத்தாண்டை பல்வேறு விதமாகக் கொண்டாடி வரும் நிலையில்,. திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் காவல்துறை சார்பாக கேக் வெட்டி புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூறி பொதுமக்களிடம் கொண்டாடினார்..

காவல்துறையினர் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அந்த பகுதியில் வாகனங்களில் செல்லும் பொதுமக்களை அழைத்து புத்தாண்டு நிகழ்வினைக் கொண்டாடினார்கள்.. மேலும், மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் செய்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அந் நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இனிப்புகள் வழங்கி அவர்களோடு தமது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்தினை பகிர்ந்தும் ஏற்றும் கொண்டாடினார்.

பேட்டி: எஸ். ஜெயக்குமார்

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here