ராமநாதபுரம், ஏப்.29-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளதற்கு கலெக்டர் வீரராகவ ராவ் பள்ளிக்கல்வி துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2018-19ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான அரசு பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 255 பள்ளிகளை சார்ந்த 8 ஆயிரத்து 240 மாணவர்கள், 8 ஆயிரத்து 383 மாணவியர்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 623 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.
பள்ளி கல்வி துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகப்பு அரசு பொது தேர்வுக்கான முடிவுகளின்படி மாணவர்களின் ஓட்டுமொத்த தேர்ச்சி 98.48 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது. மாவட்டதிலுள்ள 255 பள்ளிகளில் மொத்தம் 178 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 131 அரசு பள்ளிகிளல் மட்டும் கணக்கிடும்போது 94 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வெழுதிய 62 மாற்றுத்திறன் கொண்ட மாணாக்களில் 58 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்காக சிறப்பாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் கடுமையாக உழைத்த மாணாக்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
படத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேம்(ராமநாதபுரம்), பாலதண்டாயுதபாணி (மண்டபம்), ராமர் (பரமக்குடி) ஆகியோர் உடனிருந்தனர்.