ராமநாதபுரம்:
அதிமுகவின் கூட்டணி வேட் பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்று ராம நாதபுரம் மா வட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனிய சாமி நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
ராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கும், ராமநாதபுரம் நாடாளு மன்ற கூட்டணி கட்சி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத் திற்கும், வாக்கு சேகரித்த கழக நிர் வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி யினருக்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம். ஏ. முனிய சாமி நன்றி தெரி வித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டு காலம் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் மதக் கலவரம் நிகழாமல் நாட்டை அமைதி பூங்காவாக ஆட்சி நடத்தியவர் பிரதமர் மோடி. இந்தியாவை வழி நடத்துகிற பிரதமராக இருப்பவர் தான் மோடி. ஸ்டாலின் கை காட்டியவர் கவுன் சிலராக கூட வர முடியாத நிலையில் எப்படி பிரதமராக முடியும்? காங்கிரஸ் கட்சியை மக்கள் கை கழுவும் நேரம் வந்து விட்டது. வரும் தேர்தல் முடிவுக்கு பின்பு திமுக விற்கு மக்கள் சீல் வைத்து விடு வார்கள்.
இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்தி என ஸ்டாலின் முன் மொழிந்தார். ஆனால் மேற்கு வங்கத்தில மம்தா பானர்ஜி கூட்டிய மா நாட்டில் ஸ்டாலின் வாய் திறக்க வில்லை. இதுதான் ஸ்டாலின் நிலைப் பாடு. கழக ஒருங் கிணைப் பாளர் மற்றும் இணை ஒருங் கிணைப் பாளரின் ஆதர வோடும் ராம நாதபுரம் நாடாளு மன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் நயினார் நாகேந்திரன், பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் சதன் பிரபாகரன் இருவரும் அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
ராம நாதபுரம் மா வட்டத் திற்கு விரைவில் ஒரு மத்திய அமைச்சர் வருவார். கழக அரசின் ஒத்துழைப் போடு மோடி தான் மீண்டும் நாட்டின் பிரதமராக பதவி யேற்பார். என்னுடன் இணைந்து தேர்தல் பணி யாற்றிய அனை வருக்கும் நன்றி.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம். ஏ. முனிய சாமி கூறினார்.