ராமநாதபுரம், ஜூலை 15-
ராமநாதபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப் பட்ட சுற்றுச்சுவரை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வும் அமைச்சருமான தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலத் திட்டப் பணிகளை செய்து வந்துள்ளார். குறிப்பாக மக்கள் யார் வந்து தங்களது பகுதியின் தேவைக் குறித்து மனு கொடுக்கும் பட்சத்தில் குறை சம்பந்தப்பட்ட துறை அதிகளிடம் உடனடியாக தொடர்புக் கொண்டு நிறை வேற்றித் தர பரிந்துரைப்பது இன்றி தொடர் கவனமும், அழுத்தமும் தந்து தொகுதி சம்பந்தப்பட்ட அனைத்து குறைகளையும், உடனடியாக நிறைவேற்றி தந்துவிடுகிறார். அரசு மருத்துவமனை பகுதியில் நீண்ட நாட்களாக மாவட்ட அரசு தலைமை மருத்து மனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை பெற்று விட்டு பஸ் ஏறுவதற்கு வெயிலிலும், மழையிலும் மிகவும் கஷ்டப் பட்டு கொண்டு இருந்தனர். இதை அவ் வழியே சென்று பார்த்த அமைச்சர் உடனடியாக அரசு மருத்துவமனை வளாகத்தில் நவீன முறையில் இரு புறங்கள் வழியாகவும் செல்லும் வகையில் பொதுப் பணித் துறையின் மூலம் நிழற்குடை அமைத்து பயணிகள் அமர்வதற்கு நவீன இருக்கைகள் அமைத்து தந்துள்ளார். இந் நிலையில் நொச்சி வயல் ஊரணி பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடப்பதால் சுற்றுச் சுவர் வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தனது சட்ட மன்ற நிதியிலிருந்து நொச்சிவயல் ஊரணி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்துள்ளார். அந்த சுற்றுச் சுவரை அமைச்சரே வந்து திறந்து வைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பள்ளி பெற்றோர்களும், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் கோரிக்கை வைத்ததை ஏற்று தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பள்ளி சுற்றுச் சுவரை திறந்து வைத்தார். பின் அப் பகுதியில் வழக்கம் போல் நடந்து சென்று பலரது வீட்டின் முன்பாக நின்று மக்களிடம் பேசி நலம் விசாரித்த தோடு, தொகுதியில் என்ன செய்தால் நன்றாக இருக்கும் என மக்களிடமே ஆலோசனை களையும் கேட்க துவங்கி விட்டார்.
உடன் கட்சி நிர்வாகிகள் பலரும் சென்றனர்.