ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்தும் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராமநாதபரம் அரண்மனையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை  பற்றி அவதூறாக பேசிய மாநில அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முதுகுளத்துார் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் முன்னிலை வகித்தார். செல்லத்துரை அப்துல்லா, காருகுடி சேகர் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் பேசும்போது, நாங்கள் காந்திய வழியில் அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்றுதந்தவர்கள். எங்கள் தலைவர் குடும்பத்தை பற்றி பேச தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு என்ன தகுதி இருக்கு? நாங்கள் சிறையை பற்றி கவலைப்படமாட்டோம். செய் அல்லது செத்துமடி என்ற பொன்மொழிக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இது போன்ற அவதூறு பேச்சால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர். காங்கிரஸ் தொண்டர்களை சீண்டிபார்க்க வேண்டாம், என ஆவேசமாக பேசினார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here