இராமநாதபுரம் , ஆக, 20- இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக எம்.ஏ. முனியசாமி பதவியேற்றார். அவருக்கு, அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருக்கான தேர்தல் நடைப் பெற்றது. இத் தேர்தலில் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தேர்வு செய்யப் பட்டுள்ளார். துணைத் தலைவராக ஜெயஜோதி யும் மற்றும் 19 உறுப்பினர்களும் தேர்வு செய்யப் பட்டனர்.
இதைத் தொடர்ந்து தேர்வு செய்யப் பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைப் பெற்றது . இதில் தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சான்றுயிதழை துணைப்பதிவாளர் முருகேசன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பதவியேற்ற புதிய தலைவருக்கு துணைத் தலைவரும் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தலைவரோடு பகிர்ந்துக் கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய தலைவராக பதவியேற்ற எம்.ஏ. முனியசாமி கூறுகையில் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மத்திய கூட்டறவு வங்கி இயங்கி வருகிறது. இதில் இராமநாதபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை தமிழகத்திலயே சிறந்து விளங்கும் வங்கியென பெயர் எடுக்க பாடுபடுவேன். குறிப்பாக இம்மாவட்டத்தில் உழவர்கள் அதிகமாக உள்ளனர் . அவர்களுக்கான பயிர் கடனை உரிய நேரத்தில் வழங்கி ஏற்கனவே செயல்பட்டு வருகிறேன். அதேப்போல் மத்திய கூட்டறவு வங்கியை மக்கள் நாடும் வண்ணம் தனியார் வங்கிகளுக்கு முன்னோடியாக தரத்தினை மேம்படுத்துவேன். மேலும் சிறு வியாபாரிகள் , மாற்றுத்திறனாளிகள் , சுய உதவிக் குழுக்கள் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் வாழ்க்கை மேம்பட பாடுபடுவேன் என தலைவர் எம்.ஏ. முனியசாமிக் கூறினார்.