பொன்னேரி, மார்ச். 16 –

பொன்னேரி வட்டாரங்களில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதாகவும், அவர்களை மீட்டு கட்டாய கல்வி வழங்கிட வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டாரங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருவதாகவும்,  அச்சூளைகளில் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வட மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு  செங்கல் சூளை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய குடிசைகளில் குடும்பத்துடன் அவர்கள் வசித்து வருவதாகவும், இத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட கற்க முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக இந்தக் குழந்தைகளும் கல்வி அறிவு இன்றி வருங்காலத்தில் அவர்களும் கொத்தடிமைகளாகவே மாறும் சூழல் நிலவி வருவதாகவும், இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா கொத்தடிமைகளாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை மீட்டு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அவர்களது குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் எடுக்காததைக் கண்டிக்கும் வகையில், புரட்சி பாரதம் கட்சி சார்பில் பொன்னேரி அம்பேத்கர் சிலையிலிருந்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கவனயீர்ப்பு நடை பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர்.

இதற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று தொடர் குரல் எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here