கும்பகோணம், ஊஊலை. 02 –
மணிப்பூர் மாநிலத்தில் நடந்தேறி வரும் மதக் கலவர படுகொலைகளை கண்டுக் கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தியவனம் பாலா தலைமையில் கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற சமூக நீதிக்கான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாடாகுடி வழக்கறிஞர் செந்தில்குமார் உரை நிகழ்த்தும் போது, மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை தடுத்து நிறுத்த மத்தியஅரசு மற்றும் அம்மாநிலத்தில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அதனால் அம்மாநிலத்தில் உள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்போது பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு விடுத்தார்.
இதில் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், அரசமுதல்வன், நீலப்புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன், மதிமுக மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் செல்வம், திராவிட கழகம் மாவட்ட தலைவர் நிம்மதி, எஸ்டிபிஐ மாநில செயற்குழு இப்ராஹிம், மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களும் மேலும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.