திருவாரூர், மார்ச். 29 –
நேற்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருவாரூர் நகர காங்கிரஸாரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து அவர்கள் பாஜக அரசைக் கண்டித்து, அதற்கு எதிரான கண்டன முழக்கங்கங்களை எழுப்பினார்கள்.
மேலும், இதுப்போன்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் வேளையில் அதன் பகுதியாக நேற்று திருவாரூரில் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ் எம் பி துரைவேலன் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் அன்பு வீரமணி தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக்கட்சி தொண்டர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும் அவர்கள் அனைவரும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரியும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைவர் சண்முகசுந்தரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக செல்வமணி திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அருண் காந்தி நகர செயலாளர் ஆறுமுகம் எஸ் டி பி மாவட்ட தலைவர் விலாயத் உசேன் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா அம்பேத்கார் மக்கள் நல சங்கத்தின் சார்பில் விக்னேஷ் உட்பட 200க்கு மேல் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி கே எஸ் அருள் வருகை தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.