கும்பகோணம், பிப். 24 –
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பிச்சிப்பாளையம் காலனி தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 42) இவர் சென்னையில் பிரபல தனியார் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே நெய்வாசல் கீழத் தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 35) ஆவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவுக்கும் அனிதாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
தற்போது இவர்கள் இருவருக்கும் அனுஹாசினி (வயது 10) என்ற மகளும் இவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் நிரஞ்சன் (வயது 7) என்ற மகனும் இவர் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இருவருகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்து வாழும் நிலையில் நேற்று இளையராஜா மனைவி அனிதாவை பார்ப்பதற்காக நெய்வாசல் வந்திருந்தார். அப்போது இருவரும் மனம் விட்டு பேசி மனைவி அனிதா வீட்டிலேயே தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அனிதாவின் வீட்டின் கொல்லைப்புறத்தில் இளையராஜா பல வெட்டுக்காயங்களுடன் கொலை செய்திருப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் பந்தநல்லூர் காவல் துறை ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பந்தநல்லூர் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து இளையராஜா மனைவி அனிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் கள்ளக்காதலா ? அல்லது கொடுக்கல் வாங்கலா ? என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


















