மன்னார்குடி, பிப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

நலிவடைந்த நிலையில் உள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் அத் திட்டத்தின் தொடக்க விழா பாஜகவின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் அத்திட்டத்தின் படி மண்பாண்டம் தயாரிப்பு மரவேலை செய்வோர் அரிவாள் பூட்டு போன்ற இரும்பு ஆயுதங்கள் தயாரிப்போர், தையல் கலைஞர்கள், பூ மாலை தொடுப்போர் உள்ளிட்ட ஏழை எளிய கைவினைக் கலைஞர்கள் பயன்படுத்துவதற்காக வட்டி இல்லா கடனாக ஒரு லட்ச ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவாக அவ்விழா நடைபெற்றது.

தொடர்ந்து அவ்விழாவில் தகுதியான பயனாளிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பதுக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட தகுதி உடைய நபர்களுக்கு ஆன்லைன் மூலம் உடனடியாக அக்குழுவினர் விண்ணப்பித்து உதவினர்.

மேலும் அவ்விழாவிற்கு மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் மன்னார்குடி மேற்கு ஒன்றிய தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர். பாஜக ஸ்டார்ட் அப் பிரிவு மாவட்டத் தலைவர் நெடுவை ராம ராஜேஷ் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் பாஞ்சான் சேகர், கிளைத் தலைவர் நாகராஜன் இளைஞரணி மாவட்ட தலைவர் ராம் மாவட்ட துணைத்தலைவர் வீரகுரு உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் நிறைவாக தமிழரசன் நன்றிவுரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here