பூவிருந்தமல்லி, ஜூன். 15 –

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தமல்லி அம்மன் நகர் பகுதியில் தனியார் கல்லூரி அறக்கட்டளை மற்றும் பால்வளத்துறை அமைச்சர்  சா.மு.நாசர் ஆகியோர் இணைந்து நரிக்குறவர் இன மக்களுக்கு உணவு மற்றும் புத்தக பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூவிருந்தமல்லி காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் நரிகுறவர் இனம் தான் முதல் தமிழ் குடிகள், என்றும் மேலும்  பதவிகள் மட்டுமே உயர்வை தராது என்றும் படிப்புடன் கூடிய பதவிகள் மட்டுமே மேன்மையை தரும் என்றும், அதனால் கல்வி என்பது மிக முக்கியம் எனவும், அதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் தான் பெண்களுக்கான வளர்ச்சி மற்றும் கல்விக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார் என்றார். அதனாலயே இந்த ஆட்சி பெண்களை அனைத்துத் துறையிலும் மேன்மைப்படுத்தும் ஆட்சி என குறிப்பிட்டார்..

தொடர்ந்து நடந்த நடன நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளின் நடனங்களுக்கு இணையாக ‘குறத்தி வாடி ‘ பாடலுக்கு  நரிக்குறவரின பிள்ளைகள் ஆடிய நடனம் அமைந்தது, நடன நிகழ்ச்சியை கண்டுகளித்த மக்கள் கரகோசங்களை எழுப்பி  அவர்களுக்கு உற்சாகம் ஊட்டினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here